போற்றி அகவல்
சக்தி :
கால் உரம் பெற வரம் தருவாய் சக்தியே போற்றி
கை பலம் பெற வரம் தருவாய் சதியே போற்றி
பார்வைக்கு கண்ணும் சொல்லுக்கு வாயும்
பலம் பெற வரம் தருவாய் சக்தியே போற்றி
சுவைக்கு நாக்கும் கேட்க காதும்
உரம் பெற வரம்தருவாய் சக்தியே போற்றி
தலை முதல் கால் வரை இரத்தம் பாய இதயம்
பலம் பெற வரம் தருவாய் சக்தியே போற்றி
சுவாசம் சீர்பட நுரையீரல் உரம் பெற
வரம்தருவாய் சக்தியே போற்றி
மண்ணீரல் கல்லீரல் சிறுகுடல் பெருங்குடல் எல்லாம்
பலம் பெற வரம் தருவாய் சக்தியே போற்றி
வெற்று எலும்பு கூடு சற்றும் பொடியாதிருக்க
வரம்தருவாய் சக்தியே போற்றி
பிணி வராமல் தடுப்பாய் சக்தியே போற்றி
பிணி வந்தால் தாங்கும் சக்தி தருவாய் சக்தியே போற்றி
தன்னை ஆள தான் ஆள உறவு ஆள ஊர் ஆள
மண் ஆள விண் ஆள சக்தி தருவாய் சக்தியே போற்றி
கொடுத்ததை வைத்து நான் கோடு தாண்டினால்
கொடுத்ததை மீண்டு எடுத்து விடு சக்தியே சக்தி போற்றி
போற்றி போற்றி போற்றி
மலைமகளே போற்றி போற்றி
No comments:
Post a Comment
you please comment